353 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு: காரைக்காலில் கொரோனா பாதிப்பு இல்லை - நலவழித்துறை துணை இயக்குனர் தகவல்
காரைக்கால் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. வெளி மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 353 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண் காணிக்கப்படுவதாக நலவழித்துறை துணை இயக்குனர் தெரிவித்தார்.
காரைக்கால்,
காரைக்காலில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நலவழித்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக இங்கு கொரோனா பாதிப்பு இல்லை. இது குறித்து மாவட்ட நல வழித்துறை துணை இயக்குனர் டாக்டர் மோகன்ராஜ் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
காரைக்கால் மாவட்ட நிர்வாகத்துடன் நலவழித் துறையும் இணைந்து தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நட வடிக்கைகள், கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு வரு கிறது. மாவட்டத்தில் இது வரை வீட்டில் தனிமைப் படுத்தப்பட்ட 14 நாட்களுக்கு உட்பட்டவர்களாக 353 பேர் உள்ளனர். இவர்கள் நலவழித் துறையினரின் நேரடி கண் காணிப்பில் உள்ளனர். 15 முதல் 28 நாட்களுக்கு உட் பட்டவர்களாக 1,395 பேர் உள்ளனர். அவர்களும் கண் காணிக்கப்படுகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள 11 அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களில் இருந்து கிராமப்புற செவிலியர்கள், சுகாதார உதவி யாளர்கள், ஆஷா அமைப் பினர் ஆகியோர் தனிமைப் படுத்தப்பட்டவர்களின் வீடு களுக்கு தினமும் சென்று, அவர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள் குறித்து விவரம் கேட்டறிந்து, நலவழித்துறைக்கு தகவல் தருகின்றனர். இதன் மூலம் அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்படு கிறது. மேலும் அவர்களின் வீடுகளில் தனிமைப் படுத்தப் பட்டவர் வீடு என்கிற சுவ ரொட்டி ஒட்டப்பட்டு உள்ளது.
காரைக்காலுக்கு நேற்று முன்தினம் மட்டும் வெளி மாவட்டங்களில் இருந்து 70 பேர் வந்துள்ளனர். இவர்கள் பரிசோதனைக்குள்ளாக்கப் பட்டு, நலவழித்துறையின் வழி காட்டலில் செயல்படுகின்ற னர். குறிப்பாக, இவர்களை வீட்டிலேயே தனித்திருக்க வேண்டும், வெளியில் வரக் கூடாது என்று அறிவுறுத்தப் பட்டு உள்ளது.
காரைக்காலில் இதுவரை யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட வில்லை. மக்கள் தொடர்ந்து சமூக இடைவெளியை கடை பிடித்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் நலவழித்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story