காஞ்சீபுரத்தில் போலீசாரின் தடுப்புகளால் ஆம்புலன்ஸ் செல்ல தாமதம் - அகற்றக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
காஞ்சீபுரத்தில் போலீசாரின் தடுப்புகளால் ஆம்புலன்ஸ் செல்ல தாமதம் ஏற்படுகிறது. இதனால் அவற்றை அகற்றக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சீபுரம்,
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், காஞ்சீபுரம் நகரில் பாதிக்கப்பட்ட நபர் உள்ள பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், மாவட்ட நிர்வாகம் தடுப்புகள் வைத்து அடைத்துள்ளது. மேலும் தடுப்புகளில் கதவு அமைத்து உரிய காரணங்களுக்கு மட்டும் பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக அவசரமாக செல்லும் ஆம்புலன்ஸ் அந்த தடுப்புகளை கடந்து செல்ல சுமார் 1 மணி நேரம் தாமதம் ஏற்படுகிறது. இதனால் உயிருக்கு ஆபத்தான நிலைமை ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
இதனால் ஆம்புலன்ஸ் மட்டும் விரைவாக செல்ல மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story