வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை


வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் அரசுக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 19 April 2020 4:31 AM IST (Updated: 19 April 2020 4:31 AM IST)
t-max-icont-min-icon

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்,

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மண்பாண்ட தொழிலாளர்கள்

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைத்து தொழிலாளர்கள் வேலை வாய்ப்பினை இழந்துள்ளனர். இதில் மண்பாண்ட தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன், கிடாரங்கொண்டான், தில்லைவிளாகம், குறிச்சி, கானூர், ராயபுரம் உள்பட திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஏராளமான மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

கோவில் திருவிழா, குடமுழுக்கு, கல்யாணம் போன்ற சுப விழாக்களில் பானைகள், கலயங்கள், அரசாணி பானை உள்பட பல்வேறு பொருட்களை வடிவமைத்து மண்பாண்ட தொழிலாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர். மழை காலங்களில் வேலை வாய்ப்பினை இழக்கின்ற நிலையில் வெயில் காலத்தில் தான் அதிகமாக உற்பத்தி செய்து பொருட்களை விற்பனை செய்வது வழக்கம்.

வாழ்வாதாரம் பாதிப்பு

இதுமட்டுமின்றி மண் அடுப்பு, பூந்தொட்டிகள் எந்தநாளும் தயாரித்து விற்கப்படுகிறது. கார்த்திகை தீப காலங்களில் அகல் விளக்குகள் லட்சகணக்கில் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இந்த சூழ்நிலையில் கொரோனாவின் தாக்கத்தினால் மண்பாண்ட தொழில் நலிவடைந்துள்ளது. உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்ய முடியாமலும், புதிதாக உற்பத்தி செய்ய முடியாமலும் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் எங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கோவில் மற்றம் திருமண விழாக்கள் நடைபெற்றால் தான் எங்களது மண்பாண்ட பொருட்கள் விற்பனையாகும். ஆனால் ஊர் முழுக்க எந்த விழாவும் நடைபெறவில்லை.

நிவாரண உதவி

இதனால் மண்பாண்ட தொழிலை நம்பி உள்ள குடும்பங்கள் அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறோம். தற்போது கோடை காலம் என்பதால் குடிநீர் பானைகள் விற்பனை நடைபெறும். மக்கள் நடமாட்டம் இல்லாததால் அந்த விற்பனையும் முடங்கியுள்ளது.

24 நாட்கள் வேலை வாய்ப்பினை இழந்துள்ள நிலையில் அரசு வழங்கிய உதவி தொகை, நிவாரண பொருட்கள் போதுமானதாக இல்லை. ஊரடங்கினால் பொருளாதார இழப்பை சந்தித்து வருகிறோம். அகல் விளக்குகள், திருஷ்டி பொம்மைகள், உண்டியல் என ஆயிரக்கணக்கில் தயாரித்து வைக்கப்பட்டவை அனைத்தும் விற்பனை செய்ய முடியாமல் முடங்கி கிடக்கின்றது. எங்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

எனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மண்பாண்ட தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story