ஊரடங்கை மீறியதாக கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது 6,251 வாகனங்கள் பறிமுதல்

ஊரடங்கை மீறியதாக கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது 6,251 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 19 April 2020 5:33 AM IST (Updated: 19 April 2020 5:33 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. 6 ஆயிரத்து 251 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது. 6 ஆயிரத்து 251 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடந்த மாதம் 25-ந் தேதி முதல் அமலில் இருந்து வருகிறது. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் திரிபவர்கள், இருசக்கர வாகனங்களில் தேவையின்றி வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்பவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. அதன்படி அடையாள அட்டை இன்றி வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் வந்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

10 ஆயிரத்தை தாண்டியது

தஞ்சை மாவட்டம் முழுவதும் கடந்த 25-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் திரிந்த 10 ஆயிரத்து 745 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக 10 ஆயிரத்து 514 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கைதானவர்களிடம் இருந்து 6,251 இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Next Story