ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அச்சக தொழிலாளர்கள் விதிவிலக்கு அளிக்க கோரிக்கை
ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அச்சக உரிமையாளர்கள், தொழிலாளர்கள் தங்களது தொழிலுக்கு விதிவிலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி,
ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அச்சக உரிமையாளர்கள், தொழிலாளர்கள் தங்களது தொழிலுக்கு விதிவிலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூடப்பட்ட அச்சகங்கள்
திருமணம், கிரகபிரவேசம், காதணி உள்ளிட்ட குடும்ப விழாக்கள், திறப்பு விழா, கோவில் விழாக்களுக்கு அழைப்பிதழ் அச்சடித்து கொடுக்கும் பிரிண்டிங் பிரஸ் நிறுவனங்கள் திருச்சி மாவட்டத்தில் சுமார் 300 உள்ளன. இந்த நிறுவனங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
திருச்சி அல்லிமால் தெருவில் அழைப்பிதழ்கள், அவற்றிற்கான மேல் உறைகள் விற்பனை செய்யும் கடைகள், அச்சகங்கள் என ஏராளமாக உள்ளன. ஊரடங்கு உத்தரவினால் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் அச்சகங்களும் மூடப்பட்டு விட்டன. அழைப்பிதழ் விற்பனை செய்யும் கடைகளும் திறக்கப்படவில்லை. இதனால் இவற்றில் வேலை செய்தவர்கள் வருமானத்திற்கு வழியின்றி தவித்து வருகிறார்கள்.
விதிவிலக்கு
இது தொடர்பாக திருச்சி மாவட்ட அச்சக உரிமையாளர்கள் சங்க தலைவர் பிரசாந்த், செயலாளர் மோகன் மற்றும் நிர்வாகிகள், தொழிலாளர்கள் நிருபர்களிடம் கூறுகையில் ‘வருகிற நாளை (திங்கட்கிழமை) முதல் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து விதிவிலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டு இருக்கிறது. இந்த விதிவிலக்கில் அச்சக தொழிலையும் சேர்த்து அச்சகங்கள் திறக்க அனுமதி வழங்கவேண்டும். உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தும், சமூக விலகலை கடைபிடித்தும் தொழில் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்றனர்.
Related Tags :
Next Story