கிரிக்கெட் விளையாடியதை கண்காணித்த “ட்ரோன் கேமராவை” பார்த்து தலைதெறிக்க ஓடிய சிறுவர்கள்


கிரிக்கெட் விளையாடியதை கண்காணித்த “ட்ரோன் கேமராவை” பார்த்து தலைதெறிக்க ஓடிய சிறுவர்கள்
x
தினத்தந்தி 20 April 2020 5:32 AM IST (Updated: 20 April 2020 5:32 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் நகரில் மக்கள் நடமாட்டத்தை “ட்ரோன் கேமரா” மூலம் கண்காணித்தனர். அப்போது கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள் தலைதெறிக்க ஓடினர்.

திருவாரூர்,

திருவாரூர் நகரில் மக்கள் நடமாட்டத்தை “ட்ரோன் கேமரா” மூலம் கண்காணித்தனர். அப்போது கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள் தலைதெறிக்க ஓடினர்.

“ட்ரோன் கேமரா”

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி வெளியில் நடமாடுபவர்களை பிடித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்வதுடன், அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் சிரமங்கள் உள்ளன.இந்தநிலையில் திருவாரூர் வாளவாய்க்கால் பகுதியில் உதவி கலெக்டர் ஜெயபீரித்தா மேற்பார்வையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அன்பழகன் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர் பாரதநேரு ஆகியோர் “ட்ரோன் கேமரா” மூலம் நகரம் முழுவதும் கண்காணித்தனர்.

தலை தெறிக்க ஓடிய சிறுவர்கள்

அப்போது ஓடம்போக்கியாற்றில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடியது தெரிந்தது. இந்தநிலையில் இந்த கேமராவை கண்டவுடன்சிறுவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். மேலும் மாடியில் இருந்து பட்டம் விட்ட சிறுவர்கள் செய்வது அறியாமல் சிறிது நேரம் திகைத்தனர்.

அதிலும் குறிப்பாக தடை செய்யப்பட்ட பகுதியான வண்டிக்கார தெரு, ஐந்நூற்று பிள்ளையார் கோவில் தெரு ஆகிய இடங்களை கண்காணித்தனர். திருவாரூர் நகரில் பெரும்பாலான தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

Next Story