தினந்தோறும் அதிரடி உத்தரவு: திருச்சியில் போலீசாரை தெறிக்க விடும் கமிஷனர்


தினந்தோறும் அதிரடி உத்தரவு: திருச்சியில் போலீசாரை தெறிக்க விடும் கமிஷனர்
x
தினத்தந்தி 20 April 2020 8:04 AM IST (Updated: 20 April 2020 8:04 AM IST)
t-max-icont-min-icon

தினந்தோறும் அதிரடி உத்தரவு மூலம் திருச்சி போலீஸ் கமிஷனர் போலீசாரை தெறிக்க விடுகிறார்.



திருச்சி, 

தினந்தோறும் அதிரடி உத்தரவு மூலம் திருச்சி போலீஸ் கமிஷனர் போலீசாரை தெறிக்க விடுகிறார்.

அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக திருச்சி மாநகர பகுதிகளில் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்ய போலீஸ் கமிஷனர் வரதராஜூ உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து மாநகர் முழுவதும் போலீசார் தீவிர வாகன தணிக்கை நடத்தி இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்தநிலையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூ தினமும் காலை முதல் மதியம் வரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் ரோந்து சுற்றி ஓபன் மைக்கில் போலீசாருக்கு தினமும் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து தெறிக்க விடுகிறார். இதனால் காவலர் முதல் போலீஸ் அதிகாரிகள் வரை படாதபாடு பட்டு வருகிறார்கள்.

வாகனங்கள்

வழக்கம்போல் நேற்று காலை கண்டோன்மெண்ட் பகுதியில் ரோந்து சென்ற போலீஸ் கமிஷனர், அங்கு போலீஸ் நிலையம் முன்பு நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததை கண்டார். உடனே, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியை ஓபன் மைக்கில் பிடித்த கமிஷனர், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை இன்னும் ஏன் ஆயுதப்படை மைதானத்துக்கு கொண்டு செல்லவில்லை என்று கேட்டு ஒரு பிடி பிடித்தார்.

மேலும், பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு நேரடியாக ரோந்து சென்று உடனடியாக அங்கு போலீசாரை அனுப்பி கூட்டத்தை அப்புறப்படுத்தவும் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இதனால் பணியில் உள்ள போலீசார் எந்நேரமும் மைக்கில் என்ன உத்தரவு வருமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.

Next Story