விலை வீழ்ச்சி காரணமாக பறிக்கப்படாத மிளகாய் செடியிலேயே பழுத்து உதிர்வதால் விவசாயிகள் கவலை


விலை வீழ்ச்சி காரணமாக பறிக்கப்படாத மிளகாய் செடியிலேயே பழுத்து உதிர்வதால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 20 April 2020 3:30 AM IST (Updated: 20 April 2020 9:51 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட மிளகாய் செடிகள் விலை வீழ்ச்சி காரணமாக பறிக்கப்படாமல் செடியிலேயே பழுத்து உதிர்வதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேனி,

தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மிளகாய் பயிரிடப்படுகிறது. குறிப்பாக திருமலாபுரம், அம்மச்சியாபுரம், அரப்படிதேவன்பட்டி, குன்னூர் ஆகிய பகுதிகளில் அதிகளவில் மிளகாய் பயிரிடப்படுகிறது. பயிரிடப்பட்ட செடிகள் நன்கு வளர்ச்சியடைந்து மிளகாய் விளைந்த நிலையில் விலை வீழ்ச்சியடைந்தது. இதன்காரணமாக மிளகாய், செடிகளில் இருந்து பறிக்கப்படாமல் பழுத்து உதிர்ந்து வீணாகி வருகிறது. எனவே விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.50 ஆயிரம் செலவு செய்து மிளகாய் பயிரிட்டோம். மிளகாய் நன்றாக விளைந்தபோதிலும் விலை வீழ்ச்சியடைந்தது. மிளகாய் பறிப்பதற்கு கூலி ஒருவருக்கு ரூ.200 தரவேண்டியுள்ளது. மேலும் பறிக்கப்பட்ட மிளகாயை வாங்கும் வியாபாரிகள் ஒரு கிலோ ரூ.4 என விலை நிர்ணயம் செய்கின்றனர். இதன்காரணமாக மிளகாய் பறித்த கூலிக்கு கூட விலை கட்டுப்படி ஆகவில்லை. எனவே மிளகாயை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டோம். இதனால் மிளகாய் பழுத்து செடியிலேயே உதிர்ந்து வீணாகி வருகிறது. நாங்கள் முதலீடு செய்த ரூபாயை கூட எடுக்கமுடியாமல் சிரமப்பட்டு வருகிறோம் என்றார்.

Next Story