நீடாமங்கலம் அருகே பருத்தி வயலில் அதிகாரிகள் ஆய்வு
நீடாமங்கலம் அருகே பருத்தி வயலில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நீடாமங்கலம்,
நீடாமங்கலம் அருகே பருத்தி வயலில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பருத்தி வயல்
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே களத்தூர் கிராமத்தில் உள்ள பருத்தி வயலில் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன், பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் ராஜா.ரமேஷ், கொரடாச்சேரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகளை கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு சில வயல்களில் அசுவினி பூச்சியின் தாக்குதல் அறிகுறிகள் காணப்படுவதை அதிகாரிகள் கண்டறிந்தனர். பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
வளர்ச்சி பாதிக்கப்படும்
அசுவினி பூச்சி மிகச்சிறிய அளவிலான பூச்சியாகும். இவை இலைகளின் அடிப்பாகத்தில் மஞ்சள் நிறத்தில் கூட்டம் கூட்டமாக காணப் படும். வளர்ந்த பூச்சி 12 முதல் 20 நாட்கள் உயிர் வாழும். பருத்தி பூ, பிஞ்சுகள் பிடிக்கும் காலங்களில் பூச்சி தாக்கினால் அவை உதிர்ந்து விடும்.
இந்த பூச்சிகள் தேன் போன்ற திரவத்தை கழிவு பொருளாக வெளியேற்றுகின்றன. இதனை எறும்புகள் உட்கொள்வதோடு மட்டுமல்லாமல் அசுவினி பூச்சிகளை ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்துக்கு இடம் பெயர்வதற்கு உதவி புரிகின்றன. இதனால் பயிரின் வளர்ச்சி பாதிக்கப்படும். வயல் வரப்புகளில் தட்டை பயிரை ஓரப்பயிராக பயிரிடுவதால் பொறிவண்டு, கிரைசோபிட் உள்ளிட்ட நன்மை செய்யும் பூச்சிகள் பெருகி அசுவினி பூச்சியை கட்டுப்படுத்தும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Related Tags :
Next Story