கொரோனா ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதால் மயிலாடுதுறையில், முன்னெச்சரிக்கையாக 3 வங்கிகள் மூடப்பட்டன


கொரோனா ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதால் மயிலாடுதுறையில், முன்னெச்சரிக்கையாக 3 வங்கிகள் மூடப்பட்டன
x
தினத்தந்தி 21 April 2020 5:12 AM IST (Updated: 21 April 2020 5:12 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில், கொரோனா வைரஸ் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதால் முன்னெச்சரிக்கையாக 3 வங்கிகள் மூடப்பட்டன.

குத்தாலம், 

மயிலாடுதுறையில், கொரோனா வைரஸ் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டதால் முன்னெச்சரிக்கையாக 3 வங்கிகள் மூடப்பட்டன.

கொரோனா வைரஸ் உறுதி

மயிலாடுதுறை நகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது குடும்பத்தினரும், மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவரின் வீட்டை சுற்றி உள்ள 20-க்கும் மேற்பட்ட தெருக்கள் தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டது. மேலும் அந்த தெருக்களில் வசிப்பவர்கள் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர். அடைக்கப்பட்டுள்ள தெருக்கள் அனைத்திலும் சுகாதார பணியாளர்கள் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

மூடப்பட்ட வங்கிகள்

இந்த நிலையில் தடை செய்யப்பட்ட தெருக்களுக்கு மிக அருகில் உள்ள 3 வங்கிகளையும் மூடும்படி நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 2 தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, ஒரு தனியார் வங்கி ஆகிய 3 வங்கிகள் மூடப்பட்டன. அந்த வங்கிகளின் முன்பு கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி வங்கி கிளையின் செயல்பாடுகள் மறு உத்தரவு வரும்வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அறியாமல் நேற்று தேசியமயமாக்கப்பட்ட முதன்மை வங்கியின் முன்பு கூடிய 100-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள், அறிவிப்பு பலகையை பார்த்துவிட்டு ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story