மணவாசி சுங்கச்சாவடி செயல்பட தொடங்கியது வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பு
கரூர் மணவாசி சுங்கச்சாவடி செயல்பட தொடங்கியது. இதனால் வாகனங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம்,
கரூர் மணவாசி சுங்கச்சாவடி செயல்பட தொடங்கியது. இதனால் வாகனங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு
உலகம் முழுவதும் பலரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு இந்தியா முழுவதும் மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியது. பின்னர் இதனை அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதனால் கடைகள் மற்றும் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது மத்திய அரசு சமூக இடைவெளியை கடைபிடித்து செயல்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்து 20 தொழில்கள் நடத்த அனுமதி அளித்தது.
செயல்பட தொடங்கியது
இந்தநிலையில் நேற்று முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வாகனங்களுக்கு சுங்ககட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இதன் ஒருபகுதியாக கரூர் மாவட்டம் மணவாசி சுங்கச்சாவடி நேற்று நள்ளிரவு முதல் திறக்கப்பட்டு, வழக்கம்போல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டது.
அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் மாற்றமின்றி பழைய கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும் சுங்கச்சாவடியில் நுழையும் வாகனங்கள் அனைத்திற்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்பே செல்ல அனுமதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story