அரியமான் கடற்கரையில் ஒதுங்கும் பவளப்பாறைகள்
ஊரடங்கினால் அரியமான் கடற்கரை ஆள்நடமாட்டம் இன்றி இருப்பதால் அங்கு பவளப்பாறைகள் ஒதுங்கு கின்றன.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ளது அரியமான் கடற்கரை பகுதி. இது மாவட்டத்திலேயே அதிகமான சவுக்கு காடுகளை கொண்ட மிக நீண்ட கடற்கரை பகுதி ஆகும். இந்த கடற்கரையையொட்டி லட்சக் கணக்கான சவுக்கு மரங்கள் அடர்த்தியாக மிக உயரமாக வளர்ந்துள்ளன. அங்கு சென்றாலே மிகவும் குளுமையாக இருக்கும்.
இதனால் ராமேசுவரம் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் அரியமான் கடற்கரை வந்து சவுக்கு மரங்களுடன் காட்சியளிக்கும் கடற்கரையை பார்த்து ரசித்து, விசாலமான அந்த இடத்தில் அமர்ந்து அதன் பின்னரே புறப்படுவார்கள்.
கொரோனா பரவலை தடுக்க அமலில் உள்ள ஊரடங்கு காரணமாக, கிட்டத்தட்ட ஒரு மாதமாக அரியமான் கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் மற்றும் மக்கள் நடமாட்டம் எதுவும் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
கடல் அலைகளின் வேகத்தால் கடலில் இருந்து பல வகை சிப்பிகளும் மற்றும் பவளப்பாறை கற்களும் கரை ஒதுங்கி உள்ளன. சுற்றுலா பயணிகள் யாரும் வராததால், கடற்கரை பகுதியில் ஆங்காங்கே அவை குவியலாக காட்சி அளிக்கின்றன.
Related Tags :
Next Story