ரேபிட் பரிசோதனை கருவி மூலம் போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை


ரேபிட் பரிசோதனை கருவி மூலம் போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை
x
தினத்தந்தி 22 April 2020 3:45 AM IST (Updated: 22 April 2020 3:42 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.

மீஞ்சூர், 

மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள 55 கிராம ஊராட்சிகள், மீஞ்சூர், பொன்னேரி ஆகிய பேரூராட்சிகளில் என 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் தலைமையில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார அலுவலர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள் உள்பட பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்குள்ளானவர்கள் பற்றி கண்டறிய 220 ரேபிட் பரிசோதனை கருவிகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து ஊரடங்கு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், வரு வாய்த்துறையினர், உள்ளாட்சித் துறையினர் மற்றும் கொரோனா பாதிப்புக்குள்ளான பகுதியை சேர்ந்தவர் களுக்கு பரிசோதனையை தொடங்கினர்.

முதற்கட்டமாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொன்னேரி போலீஸ் உதவி சூப்பிரண்டு பவன்குமார்ரெட்டி, பயிற்சி உதவி சூப்பிரண்டு ஆதர்ஸ்பச்சேரா, பேரூராட்சி செயல் அலுவலர்கள் வெற்றியரசு, பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் மதியரசன், வெங்கடேசன், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்பட 140 பேருக்கு ரேபிட் பரிசோதனை கருவி மூலம் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் இதையடுத்து நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி ரூ.2 லட்சம் மதிப்பில் 32 கண்காணிப்பு கேமராக்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story