திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு அமைச்சர் காமராஜ் தகவல்
திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லா உணவு வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.
கொரடாச்சேரி,
திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களிலும் விலையில்லா உணவு வழங்கப்படும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.
அரிசி-காய்கறி
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள், டிரைவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ரேஷன் பொருட்கள்
கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏழை, எளிய மக்களுக்கு ரூ.1,000 மற்றும் ஏப்ரல் மாத ரேஷன் பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 98.4 சதவீத மக்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு விட்டது. அரிசி, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள் 91.4 சதவீதம் வழங்கப்பட்டு விட்டது. மற்றவர்களுக்கும் வழங்க பணம் மற்றும் பொருட்கள் தயாராக உள்ளது. பயனாளிகள் தாமதமின்றி பெற்றுக்கொள்ள வேண்டும்.
விலையில்லா உணவு
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மே மாத ரேஷன் பொருட்களும் விலையில்லாமல் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார். அந்த பொருட்கள் வழங்குவதற்கான தேதியினை முதல்-அமைச்சர் விரைவில் அறிவிப்பார். அதனை தொடர்ந்து பொருட்கள் வழங்கப்படும். சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவுக்கு சேலம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கட்டணம் செலுத்தப்படும் என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் ஆகிய நகராட்சி பகுதிகளிலும், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலும் இயங்கும் அம்மா உணவகங்களில் விலையில்லாமல் உணவு வழங்கப்படும். அதற்கான கட்டணம் திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் செலுத்தப்படும்.
Related Tags :
Next Story