கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து அதிகாரி எச்சரிக்கை
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை கூடுதல் இயக்குனர் சுப்பையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர்,
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை கூடுதல் இயக்குனர் சுப்பையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உரக்கடைகளில் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் வேளாண்மை கூடுதல் இயக்குனர் சுப்பையா, தரக்கட்டுபாடு உதவி இயக்குனர் விநாயகமூர்த்தி, வேளாண் அலுவலர் முருகவேல் ஆகியோரை கொண்ட குழுவினர் திடீரென ஆய்வு செய்தனர்.
அப்போது உரம் கையிருப்பு, அரசு நிர்ணயித்த விலையில் விவசாயிகளுக்கு உரம் விற்கப்படுகிறதா? உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் இருப்பு பதிவேடு முறையாக பராமரிக்காமலும், முறையாக அனுமதி பெறாமலும் இருந்த 2 உரக்கடைகள் உரம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.
உரிமம் ரத்து
இதனை தொடர்ந்து திருவாரூர் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் வேளாண்மை அலுவலர்கள் மற்றும் உர விற்பனையாளர்களுக்கான சிறப்பு ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வேளாண்மை கூடுதல் இயக்குனர் சுப்பையா பேசுகையில், ‘ஆன்லைன் பில் முறையில் உரங்கள் விற்பனை செய்ய வேண்டும். அனுமதிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்ய வேண்டும். கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும்’ என்றார். கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story