பாபநாசம், அம்மாப்பேட்டை பகுதிகளை சேர்ந்த தூய்மை பணியாளர் குடும்பங்களுக்கு அரிசி-காய்கறி
பாபநாசம், அம்மாபேட்டை பகுதிகளை சேர்ந்த தூய்மை பணியாளர் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகளை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.
கபிஸ்தலம்,
பாபநாசம், அம்மாபேட்டை பகுதிகளை சேர்ந்த தூய்மை பணியாளர் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறிகளை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார்.
அரிசி-காய்கறி
தஞ்சை மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகள், அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 44 ஊராட்சிகள், அம்மாப்பேட்டை பேரூராட்சி, மெலட்டூர் பேரூராட்சி, அய்யம்பேட்டை பேரூராட்சி, பாபநாசம் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 260 தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு மற்றும் காய்கறி தொகுப்பு உள்ளிட்ட பொருட்களை தனது செலவில் வழங்க அமைச்சர் துரைக்கண்ணு ஏற்பாடு செய்தார்.
அதன்படி பாபநாசம், அம்மாப்பேட்டை ஆகிய இடங்களில் உள்ள ஒன்றிய அலுவலகங்களில் தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் துரைக்கண்ணு முன்னிலை வகித்தார்.
ரூ.5 லட்சம் பொருட்கள்
ஒன்றிய ஆணையர்கள் அறிவானந்தம், ஆனந்தராஜ், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கார்த்திகேயன், பொன்னுசாமி உள்ளிட்டோர் பொருட்களை வழங்கினர்.
நிகழ்ச்சியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் ஒன்றியக்குழு துணை தலைவர் பழனிசாமி, ஒன்றியக்குழு முன்னாள்தலைவர்கள் சூரியநாராயணன், கோபிநாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், ஒன்றிய பொறியாளர் விஜயகுமார், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் பாலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story