ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் யாருக்கும் நோய் தொற்று இல்லை - கலெக்டர் தகவல்


ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் யாருக்கும் நோய் தொற்று இல்லை - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 22 April 2020 5:00 AM IST (Updated: 22 April 2020 5:00 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் யாருக்கும் நோய் தொற்று இல்லை என்று கலெக்டர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம், 

கலெக்டர் வீரராகவராவ் கொரோனா நடவடிக்கைகள் குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து 4 ஆயிரத்து 777 பேர் திரும்பி வந்துள்ளனர். இவர்களில் 28 நாட்கள் கணக்கீட்டின் கீழ்வரும் நபர்கள் குடும்பத்தாருடன் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 896 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவர்களில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு சிவகங்கை மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு அதில் 2 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மீதம் உள்ள 9 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 806 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. நேற்று முன்தினம் மட்டும் மாவட்டத்தில் 75 பேருக்கு பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள முடிவுகள் வரவேண்டி உள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 11 பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 543 பேர் அடையாளம் காணப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் 14 பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை மற்றும் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. கீழக்கரையில் மட்டும் 254 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 2 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகி உள்ளது.

மீதம் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா உடனடி பரிசோதனை கருவி தேவையான அளவு வந்துள்ளது. 6 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேர்வு செய்து அவற்றில் இந்த பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story