ஊரடங்கு உத்தரவு வாபஸ் ஆன பிறகு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கட்டாயம் நடத்தப்படும் - மந்திரி சுரேஷ் குமார் சொல்கிறார்


ஊரடங்கு உத்தரவு வாபஸ் ஆன பிறகு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கட்டாயம் நடத்தப்படும் - மந்திரி சுரேஷ் குமார் சொல்கிறார்
x
தினத்தந்தி 22 April 2020 5:33 AM IST (Updated: 22 April 2020 5:33 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவு வாபஸ் ஆன பிறகு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று மந்திரி சுரேஷ் குமார் கூறினார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா வைரசை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுடன், பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் நேற்று தொலைபேசி மூலம் பேசி தன்னம்பிக்கையை ஏற்படுத்தினார்.

அவர் நேற்று மைசூரு, ஹாசன், சாம்ராஜ்நகர், உடுப்பி, தட்சிண கன்னடா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சுரேஷ்குமார், "கொரோனாவை தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் தேர்வுக்கு எப்படி தயாராகி வருகிறீர்கள். தேர்வை நடத்த வேண்டுமா?’’ என்று கேட்டார்.

கட்டாயம் நடத்தப்படும்

அதற்கு மாணவர்கள், "தாமதமானாலும் பரவாயில்லை, தேர்வை நடத்துங்கள். அதற்கு நாங்கள் தீவிரமாக தயாராகி வருகிறோம். விடுமுறை வழங்கப்பட்டு இருப்பதால் நாங்கள் இன்னும் தீவிரமாக படித்து வருகிறோம். இது எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது’’ எனறனர்.

அதற்கு சுரேஷ்குமார், "ஊரடங்கு உத்தரவு வாபஸ் ஆன பிறகு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கட்டாயம் நடத்தப்படும். அதனால் நீங்கள் தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம். கிடைத்துள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக படியுங்கள். தேர்வுக்கு தயாராகுங்கள். தூர்தர்ஷன் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன. அதையும் நீங்கள் கவனிக்கலாம்’’ என்றார்.

Next Story