வேதாரண்யத்தில் அடையாள அட்டை இல்லாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
வேதாரண்யத்தில் அடையாள அட்டை இல்லாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் பிரதான்பாபு எச்சரித்துள்ளார்.
வேதாரண்யம்,
வேதாரண்யத்தில் அடையாள அட்டை இல்லாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் பிரதான்பாபு எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடையாள அட்டை
கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சி பகுதியில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்வதற்கு வீடுகள் தோறும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்பவர்கள் இந்த அடையாள அட்டையுடன் தான் செல்ல வேண்டும்.
அந்த அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வெளியே செல்ல அனுமதி. அந்த 2 நாட்களில் ஒரு வீட்டில் இருந்து ஒரு நபர் மட்டுமே வெளியே செல்லலாம். வெளியே செல்லும்போது அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை அல்லது வேறு ஏதேனும் அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும்.
கடும் நடவடிக்கை
குறிப்பிட்ட நாட்களில் நகராட்சியின் அடையாள அட்டை இல்லாமல் அல்லது அடையாள அட்டையில் குறிப்பிடப்படாத வேறு நாட்களில் வெளியே வந்தால் அவர்கள் மீது கொள்ளை நோய் தடுப்பு சட்டம், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் போன்ற சட்டங்களின்கீழ் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். பதியப்படும் வழக்குகளால் பாஸ்போர்ட் பெறுதல், அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு பெறுதல் உள்ளிட்டவற்றுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே மக்கள் நிலைமையை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story