கோவையில், கல்லூரி மாணவி தற்கொலை - காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீதம்


கோவையில், கல்லூரி மாணவி தற்கொலை - காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீதம்
x
தினத்தந்தி 22 April 2020 3:15 AM IST (Updated: 22 April 2020 8:23 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

கோவை,

கோவை வெறைட்டிஹால் ரோடு தியாகி குமரன் வீதியை சேர்ந்தவர் யூசுப்(வயது 52). நகைப் பட்டறை நடத்தி வருகிறார். இவருடைய மகள் நஸ்ரின் (20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் கல்லூரி விடுமுறையையொட்டி நஸ்ரின் வீட்டில் இருந்து வந்தார்.

கல்லூரி மாணவி கேரள மாநிலம் வடக்கன்சேரியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. மேலும் அடிக்கடி போனிலும் பேசி வந்துள்ளார். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் காதலனுடன் போனில் பேசக்கூடாது என்று அறிவுரை கூறியுள்ளனர். இதனால் நஸ்ரின் மனவருத்தத்துடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த நஸ்ரின் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய பெற்றோர் மகள் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கதறி துடித் தனர். இதுகுறித்து தகவலறிந்த வெறைட்டிஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மரியமுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கல்லூரி மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story