தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 18 பேர் கொரோனா வார்டில் அனுமதி


தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 18 பேர் கொரோனா வார்டில் அனுமதி
x
தினத்தந்தி 22 April 2020 12:14 PM IST (Updated: 22 April 2020 12:14 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 18 பேர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 18 பேர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் இதுவரை 27 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஒரு மூதாட்டி இறந்து விட்டார். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 7 பேரும், பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் ஒருவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.

18 பேர்

தற்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 4 பேர் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியிலும், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் 14 பேரும் சிகிச்சையில் உள்ளனர். இதுதவிர கொரோனா அறிகுறியுடன் 4 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். இதனால் கொரோனா வார்டில் மொத்தம் 18 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story