ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தாராவி மக்களை தத்தெடுத்து உதவ திட்டம் - மாநகராட்சி தகவல்
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தாராவி மக்களை தத்தெடுத்து உதவி செய்ய மும்பை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
மும்பை,
மும்பையில் தாராவி உள்ளிட்ட பல குடிசைப்பகுதிகளிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் மும்பையில் உள்ள குடிசைப்பகுதிகளில் பல இடங்கள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஊரடங்கால் குடிசைப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் தாராவியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை தத்தெடுத்து உதவி செய்ய மும்பை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
15 நாட்களுக்கு ரூ.5 ஆயிரம்
இது குறித்து மாநகராட்சி ‘ஜி’ வடக்கு உதவி கமிஷனர் கிரன் திகாவ்கர் கூறியதாவது:-
அடுத்த சில மாதங்களுக்கு ஒரு நபர் தாராவியில் உள்ள 5 குடும்பங்களை தத்தெடுத்தால், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அது மிகப்பெரிய உதவியாக இருக்கும். இங்குள்ள மக்கள் வருவாய் இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த குடும்பங்கள் தத்தெடுக்கப்பட்டால், ஊரடங்கின் போது அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டிய தேவை இருக்காது. ஒரு குடும்பத்துக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி போன்ற பொருட்கள் வாங்க 15 நாட்களுக்கு ரூ.5 ஆயிரம் ஆகும். இந்த திட்டத்தை செயல்படுத்த தாராவி போலீசாருடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story