மயிலாடுதுறையில் ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதியில் ஐ.ஜி. சாரங்கன் ஆய்வு
மயிலாடுதுறையில் ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதியில் ஐ.ஜி. சாரங்கன் ஆய்வு செய்தார்.
குத்தாலம்,
மயிலாடுதுறையில் ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதியில் ஐ.ஜி. சாரங்கன் ஆய்வு செய்தார்.
சிறப்பு ஐ.ஜி. ஆய்வு
மயிலாடுதுறை திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அப்பகுதியை சுற்றி உள்ள 12 தெருக்களின் நுழைவு வாயில்கள் தடுப்புகள் அமைத்து ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் நேற்று ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதிக்கு கொரோனா தடுப்பு சிறப்பு ஐ.ஜி. மு.சி.சாரங்கன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு வசிக்கும், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து சித்தர்காடு அண்ணா திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள வெளிமாநில வியாபாரிகளை சந்தித்த அவர், அவர்களுக்கு கோதுமை மாவு, காய்கனிகள் ஆகியவற்றை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகேஷ், மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story