மணப்பாறையில் ஊரடங்கை மீறி செயல்பட்ட 10 கடைகளுக்கு ‘சீல்’
மணப்பாறையில், ஊரடங்கை மீறி செயல்பட்ட 10 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து தாசில்தார் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
மணப்பாறை,
மணப்பாறையில், ஊரடங்கை மீறி செயல்பட்ட 10 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து தாசில்தார் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
10 கடைகளுக்கு ‘சீல்’
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மணப்பாறையில் நேற்று ஜவுளிக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் திறக்கப்பட்டிருந்தன. இதுபற்றி தகவல் அறிந்த மணப்பாறை தாசில்தார் தமிழ்கனி தலைமையிலான வருவாய்துறையினர், நகரில் ஆய்வு நடத்தினர். இதில், 5 ஜவுளிக்கடைகள், 3 சலூன் கடைகள், ஒரு எலக்ட்ரிக்கல் கடை, ஒரு செல்போன் கடை ஆகியவை ஊரடங்கை மீறி திறந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 10 கடைகளுக்கும் ‘சீல்‘ வைக்கப்பட்டது. மேலும் ஊரடங்கு காலம் முடியும் வரை அரசின் உத்தரவை மீறி கடைகள் திறக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாசில்தார் தமிழ்கனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாகனங்கள் பறிமுதல்
இதேபோல் மணப்பாறை பகுதியில், கடந்த இரண்டு நாட்களாக அதிகளவிலான வாகனங்கள் நகரில் உலா வந்தன. இதையடுத்து மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு குத்தாலிங்கம் தலைமையில், இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் பஸ் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது நகராட்சியின் மூலம் வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டு உள்ளிட்ட எந்தவித அனுமதிச் சீட்டுகளும் இல்லாமல் தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தா.பேட்டை
தா.பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் யசோதா தலைமையில் போலீசார் மளிகை, பெட்டிகடைகள், மருந்து கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் பொருட்கள் சரியான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா என்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது தா.பேட்டை பகுதியில் கூடுதல் விலைக்கு அத்தியாவசிய பொருட்கள் விற்றதாக 10-க்கும் மேற்பட்ட கடைகள் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story