கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: ஸ்ரீரங்கம் கோவில் தேரோட்டம் ரத்து


கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலி: ஸ்ரீரங்கம் கோவில் தேரோட்டம் ரத்து
x
தினத்தந்தி 23 April 2020 8:30 AM IST (Updated: 23 April 2020 8:30 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியால் ஸ்ரீரங்கம் கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.

ஸ்ரீரங்கம், 

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியால் ஸ்ரீரங்கம் கோவில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். குறிப்பாக வைகுண்ட ஏகாதசி மற்றும் சித்திரை தேர் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இதில் கலந்து கொள்ள தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது உண்டு.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டுள்ளது. கோவில்களுக்கு பக்தர்கள் வருவதை தவிர்க்கும் பொருட்டு அனைத்து கோவில்களும் மூடப்பட்டுள்ளன.

தேரோட்டம் ரத்து

அதேபோல் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலும் மூடப்பட்டுள்ளது. இதனால், வழக்கமாக நடைபெறும் சித்திரை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. சித்திரை திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்று தேரோட்டம் நடைபெறவில்லை. இதனால், பக்தர்கள் நடமாட்டமின்றி கோவில் வெறிச்சோடி காணப்பட்டது. கண்ணாடி கூண்டுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேரின் முன்பு அப்பகுதியை சேர்ந்த சில பக்தர்கள் மட்டும் விளக்கேற்றி வழிபட்டனர்.

Next Story