கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முழுவீச்சில் செயல்படுகிறோம் சுகாதார பணிகள் துணை இயக்குனர் பேட்டி
கொரோனா தொற்றை கட்டுபடுத்த முழு வீச்சில் செயல்படுகிறோம் என சுகாதார பணிகள் துணை இயக்குனர் கூறினார்.
கரூர்,
கொரோனா தொற்றை கட்டுபடுத்த முழு வீச்சில் செயல்படுகிறோம் என சுகாதார பணிகள் துணை இயக்குனர் கூறினார்.
பேட்டி
கரூர் மாவட்ட, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செல்வக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் மாவட்டத்தில் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த 41 பேருக்கு பரிசோதனை செய்ததில் 24 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 17 பேருக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்தது. டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 91 பேருக்கு சோதனை செய்ததில், 18 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 352 பேருக்கு சோதனை செய்ததில் ஒருவருக்கு மட்டும் தொற்று இருப்பது உறுதியானது. கொரோனா தொற்று உறுதியானவர்கள் வசித்த 7 பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, அங்குள்ள 2200 பேருக்கு பரிசோதனை செய்ததில் யாருக்கும் தொற்று இல்லை.
துப்புரவு பணியாளர்களுக்கு பரிசோதனை
தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நிறைமாத கர்ப்பிணிகள் என 260 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தற்போது காவல்துறை, துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த சுகாதாரபணியாளர்கள், மருத்துவர்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story