தனியார் தோட்டத்தில் செம்மண் அள்ளிய 6 பேர் கைது
கன்னிவாடி அருகே தனியார் தோட்டத்தில் செம்மண் அள்ளிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கன்னிவாடி,
கன்னிவாடி அருகேயுள்ள வேலன் சேர்வக்காரன்பட்டியில் உள்ள தனியார் தோட்டத்தில் செம்மண் அள்ளுவதாக கன்னிவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதி தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர்.
அந்த தோட்டத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் செம்மண் அள்ளிய கும்பலை பிடித்தனர். விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 32), பண்ணைப்பட்டியை சேர்ந்த முருகேசன் (44), கந்தவேல் (43), செந்தில்குமார் (39), ராமர் (34), ராமனம்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் (36) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். மேலும் ஒரு பொக்லைன் எந்திரம், 5 டிராக்டர்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story