சின்னசேலம் அருகே, வடமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள்
சின்னசேலம் ஒன்றிய பகுதியில் ஊரடங்கால் வேலையில்லாமல் உணவின்றி தவித்த வடமாநில தொழிலாளர்களுக்கு அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளரும், விழுப்புரம் கூட்டுறவு ஒன்றிய தலைவருமான ராஜேந்திரன் தலைமையில் நிவாரண பொருட்களை வழங்கினார்.
சின்னசேலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றிய பகுதியில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 50 தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி கிராமங்கள் தோறும் சென்று கத்தி, கோடாரி போன்ற இரும்பு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வந்தனர். இதற்கிடையே ஊரடங்கால் அவர்கள் வேலையில்லாமல் உணவின்றி தவித்தனர். இதையடுத்து அவர்களை நாககுப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வருவாய்த்துறையினர் தங்க வைத்து உள்ளனர்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்ட செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. ஆகியோர் ஆணைக்கிணங்க சின்னசேலம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளரும், விழுப்புரம் கூட்டுறவு ஒன்றிய தலைவருமான ராஜேந்திரன் தலைமையில் கோதுமை மாவு, காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வட மாநில தொழிலாளர்களுக்கு அ.தி.மு.க.வினர் வழங்கினார்கள்.அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், கட்சியினர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story