ரப்பர் பால் வெட்டும் பணியை தொழிலாளர்கள் தொடங்கலாம் குமரி கலெக்டர் தகவல்
குமரி மாவட்ட ரப்பர் தொழிலாளர்கள் ரப்பர் பால் வெட்டும் பணிகளை மேற்கொள்ளலாம் என கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்ட ரப்பர் தொழிலாளர்கள் ரப்பர் பால் வெட்டும் பணிகளை மேற்கொள்ளலாம் என கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.
ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள்
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இதுவரை 1,253 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சோதனையில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் சிலர் குணமடைந்துள்ளனர். 1,066 பேருக்கு நோய் பாதிப்பு இல்லை, மீதம் உள்ள நபர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் ரப்பர் பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்களது ரப்பர் தோட்டங்களில் உள்ளூர் பால் வெட்டும் தொழிலாளிகள் மூலம் ரப்பர் பால் எடுக்கும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மேற்கொள்ளலாம். சமூக இடைவெளி விட்டு தொழிலாளர் பணிகளை செய்ய வேண்டும்.
வீட்டு தனிமை
குமரி மாவட்டத்தில் மொத்தம் 214 நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சமீபத்தில் வந்தவர்களுக்கு நோய் தொற்று அறிகுறிகள் இருப்பதை கண்டால், பொதுமக்கள் இதுகுறித்து கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டு அறை எண்- 1077 அல்லது 04652-231077 என்ற தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம்.
இந்த தகவலை குமரி கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story