கோவிலூர், பாப்பம்பட்டி ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள்
கோவிலூர், பாப்பம்பட்டி ஊராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது.
வேடசந்தூர்,
வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம் கோவிலூர் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட அத்தியா வசிய பொருட்கள் மற்றும் முககவசம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பரமசிவம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வேடசந்தூர் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் சந்திரா சவடமுத்து, ஒன்றிய கவுன்சிலர் சத்தியபிரியா பாலமுருகன், கோவிலூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி நடராஜன், துணைத்தலைவர் முருகேசன், ஊராட்சி செயலர் கனகவேல், ஜெயலலிதா பேரவை ஒன்றிய பொருளாளர் பாலமுருகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பழனியை அடுத்த பாப்பம்பட்டியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு பாப்பம்பட்டி ஊராட்சி தலைவர் ரதிதேவி ரங்கநாதன் தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன் முன்னிலை வகித்து தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வார்டு கவுன்சிலர்கள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் முககவசம் அணிந்ததுடன், சமூக இடைவெளியையும் கடைபிடித்தனர்.
Related Tags :
Next Story