கண்ணமங்கலம் அருகே, மரத்தில் மினிவேன் மோதி 2 பேர் பலி


கண்ணமங்கலம் அருகே, மரத்தில் மினிவேன் மோதி 2 பேர் பலி
x
தினத்தந்தி 25 April 2020 3:45 AM IST (Updated: 25 April 2020 2:43 AM IST)
t-max-icont-min-icon

கண்ணமங்கலம் அருகே புளியமரத்தில் மினிவேன் மோதி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கண்ணமங்கலம் 

சந்தவாசல் அருகே வெள்ளூர் கிராமத்தில் இருந்து வேலூருக்கு மினிவேனில் வைக்கோல் ஏற்றிச்செல்லப்பட்டது. மினிவேன் அங்கு வைக்கோலை இறக்கி விட்டு நேற்று முன்தினம் நள்ளிரவு மீண்டும் வெள்ளூர் கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது.

மினிவேனை பாளைய ஏகாம்பரநல்லூர் கொட்டாமேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது 22) என்பவர் ஓட்டி வந்தார். மேலும் அவருடன் வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த சேட்டு (55) என்பவரும் உடனிருந்தார்.

கண்ணமங்கலம் அருகே காந்திநகர் பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மினிவேன் மோதியது.

இந்த விபத்தில் மணிகண்டன் மற்றும் சேட்டு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story