கொரோனா பாதித்த சுகாதார பணியாளர் பணியாற்றிய ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது தொடர்பில் இருந்த 90 பேருக்கு பரிசோதனை
கொரோனா பாதித்த சுகாதார பணியாளர் பணியாற்றிய ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த 90 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கொரடாச்சேரி,
கொரோனா பாதித்த சுகாதார பணியாளர் பணியாற்றிய ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது. அவருடன் தொடர்பில் இருந்த 90 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சுகாதார பணியாளர்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் சுகாதார பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. அவர் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் வேலை பார்த்து வந்த பொதக்குடி ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டுள்ளது. அங்கு கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த டாக்டர், செவிலியர் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பது குறித்து பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள் என 90 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை என கண்டறியப்பட்டது.
தானாக முன்வந்து...
சமீப காலத்தில் பாதிக்கப்பட்ட நபரோடு தொடர்பில் இருந்தவர்கள் தானாக முன்வந்து தெரிவித்தால் அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட நபர் குடியிருந்த பகுதி மற்றும் கொரடாச்சேரி பேரூராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
கொரடாச்சேரி பேரூராட்சி முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கே வந்து கிடைக்கும் வகையில் பேரூராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story