மந்திரி ஜிதேந்திர அவாத்துக்கு கொரோனா பாதிப்பு


மந்திரி ஜிதேந்திர அவாத்துக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 25 April 2020 4:51 AM IST (Updated: 25 April 2020 4:51 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய வீட்டு வசதி துறை மந்திரி ஜிதேந்திர அவாத்துக்கு கொரோனா பாதிப்புஉறுதி செய்யப்பட்டது.இதையடுத்து அவர் மும்பை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மும்பை, 

மராட்டிய வீட்டு வசதி துறை மந்திரியாக இருப்பவர் ஜிதேந்திர அவாத். தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர். இவரது பாதுகாவலர்கள் சிலருக்கு கொரோனா இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 13-ந் தேதி மந்திரி ஜிதேந்திர அவாத் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். மேலும் அப்போது நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மந்திரிக்கு திடீரென காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. எனவே அவர் தானேயில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் மந்திரிக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

தற்போது அவர் மும்பை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்

மராட்டியத்தில் கொரேனாா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில், மந்திரி ஒருவருக்கும் அந்த தொற்று ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மந்திரி ஜிதேந்திர அவாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story