ஊரடங்கை பயன்படுத்தி கடைகளில் மாமூல்: நாகை வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
ஊரடங்கை பயன்படுத்தி கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டியதாக நாகை வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.
நாகப்பட்டினம்,
ஊரடங்கை பயன்படுத்தி கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டியதாக நாகை வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.
கடைகளில் மாமூல்
நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சிவப்பிரகாசம்(வயது 49). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
தற்போது கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெளிப்பாளையம் போலீஸ் நிலைய எல்லையில் இயங்கி வந்த அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டுவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது.
பணியிடை நீக்கம்
இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி வெளிப்பாளையம் காவல் நிலைய எல்லையில் உள்ள கடைகளில் மாமூல் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கேட்டு மிரட்டியதாக வியாபாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினத்திடம் புகார் செய்தனர். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்துமாறு நாகை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேலுக்கு போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து அவர் விசாரணை நடத்தி தனது விசாரணை அறிக்கையை போலீஸ் சூப்பிரண்டிடம் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை தொடர்ந்து இன்ஸ்பெக்டரை பணியிடை நீக்கம் செய்யுமாறு போலீஸ் சூப்பிரண்டு, தஞ்சை சரக டி.ஐ.ஜி.க்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசத்தை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story