இலவச அரிசி வினியோகிக்க ரூ.3.5 கோடி செலவு குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குனர் வல்லவன் தகவல்
இலவச அரிசி வினியோகிக்க ரூ.3.5 கோடி செலவானதாக குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குனர் வல்லவன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
இலவச அரிசி வினியோகிக்க ரூ.3.5 கோடி செலவானதாக குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குனர் வல்லவன் தெரிவித்துள்ளார்.
ரூ.5 கோடி செலவு
புதுவை மாநிலத்தில் சிவப்பு நிற ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் இலவச அரிசியை பேக்கிங் செய்து வழங்கப்படுகிறது. இதற்கு ரூ.5 கோடி செலவானதாக தகவல் வந்துள்ளதாகவும், அதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்திருந்தார்.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் குடிமைப்பொருள் வழங்கல் துறையின் சிறப்பு செயலாளரும், இயக்குனர் வல்லவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தவறான தகவல்
புதுவை மாநிலத்தில் சிவப்பு நிற ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டு வழங்கப்படுகிறது. இந்த பைகள் 15 கிலோ, 30 கிலோ எடை அளவுகளில் தயார் செய்யப்படுகிறது. இதற்கு தேவையான அரிசியை திருவண்டார்கோவிலில் உள்ள இந்திய உணவு கழக குடோனில் இருந்து வாகனங்களில் எடுத்து வந்து, அதனை பாலித்தீன் பைகளில் அடைக்கிறோம். அதன் பின் அவை வாகனங்களில் எடுத்துச்செல்லப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. அவற்றுக்கு எல்லாம் ஒட்டு மொத்த செலவு ரூ.3 கோடியே 5 லட்சம் தான். ஆனால் அது குறித்து தவறான தகவல் வெளியாகிறது.
அரசு நிர்ணயித்த விலை
இந்த செலவும் ஒட்டு மொத்தமாக நான்கு பிராந்தியங்களுக்கும் சேர்த்து தான். அரிசி தொடர்பான அனைத்து விஷயங்களையும் நாங்கள் முழுக்க முழுக்க வெளிப்படையாக செய்கிறோம். அதில் விதிமுறை மீறல் எதுவும் கிடையாது. விதிகளுக்கு உட்பட்டுத்தான் முழுவதும் நடக்கிறது. மிக மிக நேர்த்தியான முறையில் அரசு நிர்ணயித்த விலை பட்டியலுக்கும் குறைவான விலையில் தான் அனைத்து பணிகளும் நடக்கிறது. அரிசி வினியோகிக்கும் பணியில் அரசு ஊழியர்கள் தான் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதனால் அதற்கு என்று தனியாக செலவு ஏதும் ஏற்படவில்லை.
இவ்வாறு இயக்குனர் வல்லவன் கூறினார்.
Related Tags :
Next Story