பெங்களூருவில் இருந்து கடையநல்லூர் வந்த 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்
பெங்களூருவில் இருந்து கடையநல்லூர் வந்த 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அச்சன்புதூர்,
பெங்களூருவில் இருந்து கடையநல்லூர் வந்த 3 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கடையநல்லூர் வந்தனர்
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த சிலர் பெங்களூருவில் துணி வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அங்கிருந்து வர முடியாமல் அங்கேயே சாலை ஓரங்களில் தங்கினர். பின்னர் அங்கிருந்து நடைபயணமாக தமிழகத்தின் எல்லையான ஓசூர் வந்தனர்.
அங்கிருந்து சாலையில் செல்லும் வாகனங்களில் ஏறி கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக மதுரை வந்தனர். அதனை தொடர்ந்து கடையநல்லூருக்கு தினமும் காய்கறி ஏற்றி செல்லும் லாரியில் ஏறி விருதுநகர் மாவட்டத்தை கடந்து கடையநல்லூருக்கு நேற்று வந்தனர்.
தனிமைப்படுத்தப்பட்டனர்
இதுகுறித்து கடையநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
லாரி டிரைவர் மற்றும் பெங்களூருவில் இருந்து வந்த 3 நபர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்களிடம் துருவித்துருவி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மதுரையில் இருந்து தினசரி கடையநல்லூருக்கு காய்கறி ஏற்றி வரும் லாரியில் ஏறி வந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து சுகாதாரத்துறையினர் அவர்களின் 4 வீடுகளில், தனிமைப்படுத்தப்பட்டவர் என்ற நோட்டீஸ் ஒட்டினர். மேலும் அந்த 4 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அந்த பகுதி முழுவதும் தடுப்பு அமைத்து தனிமைப்படுத்தினர். லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பெங்களூருவில் இருந்து 7 மாவட்டங்களை கடந்து கடையநல்லூர் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story