மணப்பாறை அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து 2 மகள்கள் கொலை கிராம நிர்வாக அதிகாரியிடம் தாய் சரண்
மணப்பாறை அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து 2 மகள்களை கொன்ற தாய், கிராம நிர்வாக அலுவலகத்தில் சரண் அடைந்தார்.
மணப்பாறை,
மணப்பாறை அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து 2 மகள்களை கொன்ற தாய், கிராம நிர்வாக அலுவலகத்தில் சரண் அடைந்தார்.
கூட்டுக்குடும்பம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரம் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி சாந்திமீனா(வயது 40). இவர்களுக்கு, லோகநாதன்(14) என்ற மகனும், கோகிலா(13), லலிதா(11) என்ற 2 மகள்கள் என 3 குழந்தைகள். கனகராஜ் ஏற்கனவே இறந்து விட்டார். இதனால் சாந்திமீனா, தனது கணவர் குடும்பத்தை சேர்ந்தவர்களுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தார். அங்குள்ள பள்ளிகளில் லோகநாதன் 9-ம் வகுப்பும், கோகிலா 8-ம் வகுப்பும், லலிதா 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 19-ந் தேதி வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 ஆயிரம் மாயமானதாகவும், இதுதொடர்பாக கனகராஜின் சகோதரர், வீட்டில் இருந்தவர்களை சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. தன்னைத்தான் சந்தேகப்படுகிறார்களோ என்று மன வேதனை அடைந்த சாந்திமீனா அன்றைய தினம் குளிர்பானத்தில் எலிமருந்தை(விஷம்) கலந்து தனது 2 மகள்களுக்கும் கொடுத்தார். குளிர்பானத்தில் விஷம் கலந்திருந்ததை அறியாத அக்குழந்தைகள் அதனை குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவர்களை உறவினர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
2 பேரும் சாவு
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி நேற்று 2 பேரும் உயிரிழந்தனர். பெற்ற குழந்தைகளை கொன்று விட்டோமே என்ற மனவேதனையில் தவித்த சாந்திமீனா சமுத்திரம் கிராம நிர்வாக அதிகாரி சிவகாமியிடம் சென்று நடந்த சம்பவத்தை கூறி சரண் அடைந்தார். அவர், மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சாந்திமீனாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெற்ற குழந்தைகளுக்கு தாயே விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story