தூய்மை பணியாளர்கள்- வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை


தூய்மை பணியாளர்கள்- வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 25 April 2020 10:18 AM IST (Updated: 25 April 2020 10:18 AM IST)
t-max-icont-min-icon

தூய்மை பணியாளர்கள், வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.

நொய்யல், 

தூய்மை பணியாளர்கள், வெளிமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.

கொரோனா பரிசோதனை

கரூர் மாவட்டம், புன்செய்புகளூர் பேரூராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க தெருக்கள், சாலைகள், அலுவலகங்கள், பல்வேறு நிறுவனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பேரூராட்சி மூலம் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை காந்திமண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

முகாமை செயல் அலுவலர் சுப.சத்தியமூர்த்தி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். முகாமில் ஓலப்பாளையம் அரசு சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அனிதா தலைமையிலான டாக்டர் குழுவினர் கலந்து கொண்டு தூய்மைப்பணியாளர்களுக்கு பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து ரத்தம் எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் மாவட்ட கொரோனா தடுப்பு அலுவலர் சிவக்குமார், தாசில்தார் சிவக்குமார், பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம் அருகே உள்ள தளவாப்பாளையத்தில் கோழி பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கோழிப்பண்ணையில் குடும்பத்துடன் தங்கி, பீகார் மாநிலத்தை சேர்ந்த 30 பேரும், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 29 பேரும் வேலை பார்த்து வருகின்றனர்.

இதையடுத்து நேற்று 59 பேருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. இதில் மருத்துவர் சந்திரசேகர், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்து ரத்த மாதிரிகளை எடுத்தனர். பின்னர் ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

Next Story