கரூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து மீண்ட 22 பேர் வீடு திரும்பினர்
கரூர் அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனாவில் இருந்து மீண்ட 22 பேர் வீடு திரும்பினர்.
கரூர்,
கரூர் அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனாவில் இருந்து மீண்ட 22 பேர் வீடு திரும்பினர்.
22 பேர் குணமடைந்தனர்
கரூர், நாமக்கல் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், டாக்டர்களின் தொடர் சிகிச்சையால் பூரண குணமடைந்த 22 பேரை அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், மருத்துவக்கல்லூரி டீன் ரோசி வெண்ணிலா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் ஆகியோர் 22 பேருக்கும், பழங்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.
அப்போது டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்கள் என அனைவரும் சமூக விலகலை கடைபிடித்து வரிசையாக நின்று குணமடைந்தவர்களை கை தட்டி வழியனுப்பி வைத்தனர். மேலும், தொற்று அல்லாத நிலையில் அறிகுறிகள் காரணமாக அனுமதிக்கப்பட்டு 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் நாமக்கல்லைச் சேர்ந்த 2 பேரும், கரூரைச்சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 3 பேரும் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
45 பேருக்கு தொடர் சிகிச்சை
இதுவரை அனுமதிக்கப்பட்டவர்களில் கரூரைச் சேர்ந்த 43 பேர், நாமக்கல்லைச் சேர்ந்த 45 பேர் மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த 56 பேர் என மொத்தம் 144 பேர் இதுவரை பூரண குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும், தொற்று அல்லாத நிலையில் 28 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட கரூரைச் சேர்ந்த 48 பேரும் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆகமொத்தம் இதுவரை பூரண குணமடைந்த நிலையில் 192 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கொரோனா தொற்று பாதிப்புடன் கரூரைச் சேர்ந்த 4 பேரும், நாமக்கல்லைச் சேர்ந்த 5 பேரும், திண்டுக்கல்லைச் சேர்ந்த 22 பேரும், தொற்று அல்லாத 14 பேரும் என மொத்தம் 45 பேரும் தொடர் சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story