வெளியூர் ஆட்கள் வராமல் இருக்க கிராமங்களில் சோதனைச்சாவடி அமைத்த இளைஞர்கள்
வெளியூர் ஆட்கள் வராமல் இருக்க கிராமங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து இளைஞர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
கீரமங்கலம்,
வெளியூர் ஆட்கள் வராமல் இருக்க கிராமங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து இளைஞர்கள் கண்காணித்து வருகிறார்கள்.
கொரோனா தொற்று
சீனாவில் உள்ள உகான் நகரில் தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெளிநாடு, வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு வந்தவர்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டதுடன் அவர்களிடம் சோதனைகள் செய்யப்பட்டு நோய் தொற்று அறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வாலிபருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்காக திருச்சிக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அந்த வாலிபரின் ஊரை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் முழு கண்காணிப்பில் அதிகாரிகள் கொண்டுவந்துள்ளனர்.
கிராமங்களில் சோதனைச்சாவடி
இந்த தகவல் வெளியான நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏராளமான கிராமங்களில் அந்தந்த கிராம இளைஞர்கள் முயற்சியில் முக்கிய சாலைகளை மூடி சோதனைச்சாவடிகள் அமைத்து வெளியூர் ஆட்களை கண்காணித்து அவர்களை கிருமி நாசினிகொண்டு கை, கால்களை கழுவிய பிறகே ஊருக்குள் அனுமதிக்கின்றனர். மேலும் வாகனங்களையும் கிருமி நாசினி தெளித்த பிறகே அனுமதிக்கின்றனர். அதாவது கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு, கொத்தமங்கலம், குளமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story