திருவாரூர் மாவட்டத்தில் போலீசாருக்கு கொரோனா தொற்று இல்லை போலீஸ் சூப்பிரண்டு துரை தகவல்


திருவாரூர் மாவட்டத்தில் போலீசாருக்கு கொரோனா தொற்று இல்லை போலீஸ் சூப்பிரண்டு துரை தகவல்
x
தினத்தந்தி 26 April 2020 4:47 AM IST (Updated: 26 April 2020 4:47 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் போலீசாருக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என போலீஸ் சூப்பிரண்டு துரை கூறினார்.

திருவாரூர், 

திருவாரூர் மாவட்டத்தில் போலீசாருக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என போலீஸ் சூப்பிரண்டு துரை கூறினார்.

கொரோனா வைரஸ் பரிசோதனை

திருவாரூர் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இதில் திருவாரூரை அடுத்த கொடிக்கால்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருவாரூர் கோட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகள் உள்பட 171 போலீசாருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நேற்று திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் ஊரடங்கு உத்தரவு பாதுகாப்பு பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ள ஆயுதப்படை போலீசாருக்கு 5 கிலோ அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களையும், கிருமி நாசினி, முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை போலீஸ் சூப்பிரண்டு துரை வழங்கினார்.

அப்போது அவர் கூறுகையில், கொரோனா வைரஸ் தானாக யாருக்கும் தொற்றவில்லை. அதனை தேடி செல்பவர்களுக்கு மட்டுமே நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அனைவரும் முக கவசம், கையுறை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை போலீசாருக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என்றார்.

Next Story