இட்டமொழியில் இருந்து சாத்தான்குளம் செல்லும் மாற்றுப்பாதை அடைப்பு
நெல்லை மாவட்டம் இட்டமொழியில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வழியாக செல்லும் சாலையில் எல்லைப்பகுதியான சங்கரன்குடியிருப்பு உள்ளது.
இட்டமொழி,
நெல்லை மாவட்டம் இட்டமொழியில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வழியாக செல்லும் சாலையில் எல்லைப்பகுதியான சங்கரன்குடியிருப்பு உள்ளது. இங்கு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக போலீசார் 2 சோதனை சாவடிகள் அமைத்து வாகன போக்குவரத்தை கண்காணித்து வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் இருசக்கர வாகனங்கள், கார் போன்றவை மூலம் இட்டமொழி பஸ்நிலையத்தில் இருந்து பெரும்பனை, அழகப்பபுரம், ஆலங்கிணறு, வேலாயுதபுரம் வழியாக ஆலங்கிணறு விலக்கு சென்று தூத்துக்குடி மாவட்டத்துக்குள் நுழைந்து சாத்தான்குளம் மற்றும் பல ஊர்களுக்கு சென்று வந்தனர். இதனால் 2 சோதனை சாவடிகளிலும் மிக குறைவான வாகனங்களே கடந்து சென்றது. இதனை கவனித்த போலீசார் அழகப்பபுரத்தை கடந்து மாவட்ட எல்லைப்பகுதியில் 2 இடங்களில் முள்வேலி, கம்புகளை கொண்டு தடுப்பு ஏற்படுத்தி சாத்தான்குளம் செல்வதற்கான மாற்றுப்பாதையை அடைத்தனர். இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் திரும்பி சென்றன.
Related Tags :
Next Story