ஊரடங்கை பின்பற்றாத பெரம்பலூர் ஒன்றிய கிராம பகுதிகள் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்
ஊரடங்கை பின்பற்றாத பெரம்பலூர் ஒன்றிய கிராம பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெரம்பலூர்,
ஊரடங்கை பின்பற்றாத பெரம்பலூர் ஒன்றிய கிராம பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சீட்டு-வாலிபால் விளையாடி வருகின்றனர்
பெரம்பலூர் மாவட்டத்தில் பாளையம் கிராமத்தில் 4 வயது சிறுவன் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்நிலையில் பாளையம் அருகே உள்ள ஆலம்பாடி கிராம ஊராட்சிக்குட்பட்ட செஞ்சேரி, சொக்கநாதபுரம், ஆலம்பாடி ஆகிய கிராமங்களில் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஊராட்சி நிர்வாகத்தால் ஏற்படுத்தப்படவில்லையாம். மேலும் அந்த கிராமங்களில் காவிரி குடிநீர் வினியோகம் கிடையாததால், 2 நாட்களுக்கு ஒரு முறை மட்டும் கிணற்று குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறதாம். இதனால் குடிநீர் தேவைக்காக அந்த கிராமங்களின் வழியாக வெளியூர்களுக்கு பிரதான குழாயில் செல்லும் காவிரி குடிநீரை கேட்வால்வில் வெளியேறும் தண்ணீரை சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நின்று பொதுமக்கள் குடங்களில் பிடித்து செல்கிறார்கள்.
மேலும் ஊரடங்கை மீறி சொக்கநாதபுரம் கிராமத்தில் கோவில்களில் இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து சீட்டு விளையாடியும், தோட்டத்தில் இளைஞர்கள் கூட்டமாக நின்று வாலிபால் விளையாடி யும் வருகின்றனர். மேலும் ஆலம்பாடி கிராம ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் வடிகால்கள் சரிவர தூர்வாரப்படாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சில தொட்டிகளில் குப்பைகள் நிறைந்தும் அப்புறப்படுத்தாமல் உள்ளது. இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது.
காட்சிப்பொருளான குப்பை தொட்டிகள்
குப்பை தொட்டிகள் உடைந்தும் காணப்படுகிறது. ஆனால் ஆலம்பாடி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியின் முன்பு புதிய குப்பை தொட்டிகள் பயன்படுத்தாமல் காட்சி ப்பொருட்களாக மாறி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலம்பாடி கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் எசனை அருகே உள்ள கீழக்கரை கிராமத்திலும் கொரோனா வைரஸ் குறித்து போதிய விழிப்புணர்வு ஊராட்சி நிர்வாகம் ஏற்படுத்தாததால் விவசாய வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல், முககவசம் கூட அணியாமல் செல்கின்ற னர். அத்தியாவசிய பொருட் கள் வாங்குவதற்கு காய்கறி, மளிகை கடைகள், ரேஷன் கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் நிற்கின்றனர்.
கீழக்கரை கிராமத்தில்...
கீழக்கரை கிராமத்தில் காவிரி குடிநீர் வினியோகம் கிடையாததால், போதிய குடிநீர் கிடைக்காமல் பொது மக்கள் திண்டாடி வருகின்றனர். மேலும் கிராமத்தில் பல்வேறு இடங்களில் வடிகால் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததால் வெளியே செல்ல முடியாமல் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதில் கீழக்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்தின் கிழக்கு பகுதியில் கழிவுநீர் பள்ளத்தில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்தப்பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கீழக்கரை கிராமத்தில் தூய்மை பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story