கிராமப்பகுதிகளில் எல்லைகளை மூடிய போலீசார் கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை


கிராமப்பகுதிகளில் எல்லைகளை மூடிய போலீசார் கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 26 April 2020 6:41 AM GMT (Updated: 26 April 2020 6:41 AM GMT)

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ராயம்புரம் கிராமம் காலனி தெருவில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

செந்துறை, 

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ராயம்புரம் கிராமம் காலனி தெருவில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அதே தெருவில் வசிக்கும் மேலும் 2 பேருக்கும் கொரோனா உறுதியானது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 60-க்கும் மேற்பட்டவர்களை சுகாதாரத்துறையினர் அழைத்துச்சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர். 

இந்தநிலையில் அரியலூர் மாவட்ட போலீசார், தங்களது கட்டுப்பாட்டிற்குள் உள்ள போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு கொரோனா பரவாத வண்ணம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

அதன்படி இரும்புலிக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் செல்லும் பாதைகளை மூடி வருகின்றனர். இதில் ராயம்புரம் கிராமத்திற்கும், கீழராயம்புரம் கிராமத்திற்கும் இடைப்பட்ட சாலையை ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் பொக்லைன் எந்திரம் மூலம் துண்டித்து மண்ணை கொட்டி மூடினார். அதேபோன்று சென்னிவனம் பகுதிக்கு செல்லும் பாதையும் மூடப்பட்டது.

Next Story