செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்த 2 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன.
விழுப்புரம்,
செஞ்சியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் உள்ளது. இந்த ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு செஞ்சி மட்டுமின்றி திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டிவனம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களுடைய நெல் மூட்டைகளை கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் ஏராளமான விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை விற்பனைக்காக செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு கொண்டு சென்றனர்.
அங்கு நெல் மூட்டைகளை வியாபாரிகள் போட்டி போட்டு கொள்முதல் செய்தனர். கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை வியாபாரிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் ஆங்காங்கே வைத்திருந்தனர். இந்த நிலையில் செஞ்சியில் நேற்று காலை 8 மணி அளவில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன.
நஷ்டம்
அதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழை சுமார் 1½ மணி நேரம் பெய்தது. இதில் செஞ்சி ஒழுங்குமுறைவிற்பனைக்கூடத்தில் இருந்த 2 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. இதனால் வியாபாரிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், முழு ஊரடங்கு காரணமாக செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கூலி ஆட்கள் யாரும் வரவில்லை. மேலும் வியாபாரிகளும் பலர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இதனால் மழை வந்தபோது, நெல் மூட்டைகளை தார்பாய் போட்டு மூடமுடியவில்லை. இதனால் நாங்கள் கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகிவிட்டது. இதன் காரணமாக எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது என்றனர்.
மரக்காணம்
இதேபோல் மரக்காணம் பகுதியிலும் மழை பெய்தது. இதில் மரக்காணம் அருகே சிறுவாடியில் அமைக்கப்பட்டிந்த தற்காலிக நெல் கொள் முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிந்த 50-க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. மழை பெய்தபோது அங்கிருந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விரைந்து செயல்பட்டு நெல்மூட்டைகள் மீது தார்பாயை போட்டு மூடினர். இதனால் ஏராளமான நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் பாதுகாக்கப்பட்டது.

Related Tags :
Next Story