நாகை மாவட்ட எல்லையில் அனைத்து வாகனங்களுக்கும் கிருமி நாசினி தெளிப்பு டிரைவர்களுக்கும் உடல்நிலை குறித்து பரிசோதனை
நாகை மாவட்ட எல்லையான திருவாலங்காடு சோதனை சாவடியில் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
பாலையூர்,
நாகை மாவட்ட எல்லையான திருவாலங்காடு சோதனை சாவடியில் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. வாகனங்களை ஓட்டி வரும் டிரைவர்களுக்கும் உடல்நிலை குறித்து பரிசோதனை செய்யப்படுகிறது.
வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு
தமிழகத்தில் பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக பெரும்பாலான மாவட்ட எல்லைகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிற மாவட்டங்களில் இருந்து மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு நாகை மாவட்டத்திற்கு வாகனங்கள் வந்து செல்கின்றன.
இவ்வாறு வரும் கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் அனைத்தையும் நாகை மாவட்ட எல்லையான திருவாலங்காடு சோதனை சாவடியில் நிறுத்தி சுகாதாரத்துறை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன் தலைமையிலான சுகாதார அலுவலர்கள் கிருமிநாசினி மருந்து தெளித்து வருகின்றனர்.
டிரைவர்களுக்கு உடல் பரிசோதனை
அத்துடன் அந்த வாகனங்களை ஒட்டி வரும் டிரைவர்களின் உடல் வெப்ப நிலையை அறிந்து கொள்ள தெர்மா மீட்டர் கருவி மூலம் பரிசோதித்து வருகிறார்கள். அதன்பின்னரே அந்த வாகனங்களை நாகை மாவட்டத்திற்குள் தொடர்ந்து செல்ல அனுமதித்து வருகிறார்கள்.
தங்கள் மாவட்ட மக்களின் நலன் கருதி சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு இந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story