நெல்லையில் முழு ஊரடங்கால் எளிய முறையில் நடந்த திருமணங்கள்


நெல்லையில் முழு ஊரடங்கால் எளிய முறையில் நடந்த திருமணங்கள்
x
தினத்தந்தி 27 April 2020 8:19 AM IST (Updated: 27 April 2020 8:22 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது.

நெல்லை, 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. ஆடம்பரமாகவும், உறவினர்கள் மத்தியிலும் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. குடும்பத் தினர் ஒருசிலர் மட்டுமே பங்கேற்று திருமணத்தை நடத்தி வைக்கிறார்கள்.

நெல்லையில் நேற்றும் ஒருசில திருமண நிகழ்ச்சிகள் நடந்தன. நெல்லை டவுனை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் நேற்று திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஆனால், நெல்லை மாநகரில் நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்ததால், மணமக்கள் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத் தனர். இதற்காக நேற்று முன்தினமே மணமகள், அவரது பெற்றோர் மட்டும் நெல்லைக்கு வந்தனர். திட்டமிட்டபடி நேற்று மணமகன் வீட்டில் வைத்து எளிய முறையில் திருமணம் நடந்தது. இதில் மிகவும் குறைந்த நபர்களே கலந்து கொண்டனர். மணமக்கள் உள்ளிட்ட அனைவரும் முககவசம் அணிந்து இருந்தனர்.

இதேபோல் பாளையங்கோட்டையை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகளுக்கு நேற்று திருமணம் நடந்தது. அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

திருமண தம்பதி மற்றும் குடும்பத்தினர் அனைவரும் முககவசம் அணிந்து இருந்தனர். மணமக்களை குடும்பத்தினர் சமூக இடைவெளியுடன் நின்று ஆசீர்வதித்தனர். இதேபோல் நேற்று ஏராளமான திருமணங்கள் மிகவும் எளிய முறையில் நடந்தது.

Next Story