கார் மீது லாரி மோதியதில் சேலம் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் படுகாயம்


கார் மீது லாரி மோதியதில் சேலம் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 27 April 2020 10:02 AM IST (Updated: 27 April 2020 10:02 AM IST)
t-max-icont-min-icon

கார் மீது லாரி மோதியதில் சேலம் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் படுகாயம்.

வாணியம்பாடி,

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சீபுரத்தில் இருந்து ஒரு கார் சேலத்தை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது. வாணியம்பாடியை அடுத்த பெருமாள்பேட்டை என்ற இடத்தில் கார் வரும்போது, அந்த வழியாகப் பின்னால் வந்த ஒரு லாரி வளைவில் முந்தியபோது, திடீரென கார் மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சேலம் நில அபகரிப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகமையன் (வயது 50) உள்பட அவருடைய குடும்பத்தினர் 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் காரில் இருந்து உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக லாரி டிரைவரை வாணியம்பாடி போலீசார் கைது செய்தனர்.

Next Story