5 ஆண்டு உண்டியல் சேமிப்பு பணத்தில் ஆயிரம் பேருக்கு சூப் வழங்கிய பள்ளி மாணவி கிராம மக்கள் பாராட்டு


5 ஆண்டு உண்டியல் சேமிப்பு பணத்தில் ஆயிரம் பேருக்கு சூப் வழங்கிய பள்ளி மாணவி கிராம மக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 27 April 2020 12:09 PM IST (Updated: 27 April 2020 12:09 PM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி அருகே உள்ள குந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகள் அபி (வயது 11). 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கீழப்பழுவூர், 

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி அருகே உள்ள குந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் மகள் அபி (வயது 11). 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கல்வி தொடர்பான பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும், விருதுகளையும் வென்றவர்.

இவர் கொரோனா வராமல் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது கிராமத்தில் உள்ள அனைவருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் வகையில், மூலிகை சூப் வழங்க வேண்டும் என தீர்மானித்தார். இதையடுத்து கடந்த 5 ஆண்டுகளாக உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.3 ஆயிரத்தை கொண்டு சூப் தயாரிக்க முடிவு செய்தார். அதன்படி முருங்கைக்கீரை, மிளகு, சீரகம், பூண்டு, தக்காளி, சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், உப்பு கலந்த சூப்பை அவரது தாயாரின் உதவியோடு தயாரித்து கிராமத்தில் உள்ள ஆயிரம் பேருக்கு வழங்கினார்.

இதுகுறித்து மாணவி அபி கூறுகையில், ‘எனது கிராம மக்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்பதற்காக எனது பெற்றோர் கொடுத்த பணத்தில் செலவு போக, மீதி நான் சேமித்த பணத்தைவைத்து சூப் தயாரித்து கொடுத்து உள்ளேன், என்றார். இவரது தந்தை அண்மையில் ஒரு விபத்தில் இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தந்தையை இழந்த நிலையில் குடும்பம் வறுமையில் வாடினாலும், மக்கள் நலமுடன் வாழவேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையுடன் சிறுமி செய்துள்ள இந்த செயலை அக்கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Next Story