மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக திபங்கர் தத்தா இன்று பதவி ஏற்கிறார்


மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக திபங்கர் தத்தா இன்று பதவி ஏற்கிறார்
x
தினத்தந்தி 28 April 2020 4:55 AM IST (Updated: 28 April 2020 4:55 AM IST)
t-max-icont-min-icon

மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக திபங்கர் தத்தா இன்று பதவி ஏற்கிறார்.

மும்பை,

மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பி.பி. தா்மாதிகாரி இன்றுடன்(செவ்வாய்க்கிழமை) பணி ஓய்வு பெறுகிறார். இந்தநிலையில் மும்பை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக கொல்கத்தா ஐகோர்ட்டின் மூத்த நீதிபதி திபங்கர் தத்தாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்தார்.

திபங்கர் தத்தா இன்று மும்பை ராஜ் பவனில் நடைபெறும் விழாவில் பதவி ஏற்கிறார். கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி அவருக்கு பதவி பிராமணம் செய்து வைக்கிறார்.

கொரோனா பிரச்சினை காரணமாக இந்த விழாவில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, துணை முதல்-மந்திரி அஜித்பவார், ஐகோர்ட்டு நீதிபதிகள் சிலர் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.

ஊரடங்கு காரணமாக விமானம், ரெயில் இயக்கப்படாததால், திபங்கர் தத்தா கொல்கத்தாவில் இருந்து சுமார் 2 ஆயிரம் கி.மீ. காரில் பயணம் செய்து மும்பை வந்து சேர்ந்து உள்ளார்.

வாழக்கை குறிப்பு

மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள திபங்கர் தத்தாவுக்கு வயது 55. மேற்கு வங்கத்தை சேர்ந்த இவர், கொல்கத்தா, கவுகாத்தி, ஜார்கண்ட் ஐகோர்ட்டுகளில் அரசு வக்கீலாக பணியாற்றி உள்ளார். 2006-ம் ஆண்டு முதல் கொல்கத்தா ஐகோர்ட்டு நிரந்தர நீதிபதியாக பணியாற்றி வந்தார்.

திபங்கர் தத்தா, நீதித்துறை சார்ந்த குடும்பத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story